Categories
உலக செய்திகள்

75% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…. இங்கிலாந்து அரசு அறிவிப்பு…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் 75 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 50 சதவீதம் பேருக்கு 2 டோஸ் போடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார். மூன்றாம் அலை தீவிரமடைவதற்குள்  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முனைப்பில் இங்கிலாந்து அரசு களமிறங்கியுள்ளது. இங்கிலாந்தில் மூன்றாவது அலை தொடங்கி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |