Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு…. டெபாசிட்டுக்கு அதிக வட்டி….. ஸ்பெஷல் சலுகை அறிவித்த எஸ்பிஐ…!!!

டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி வழங்குவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி எஸ்பிஐ வங்கி பிளாட்டினம் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி 75 நாட்கள், 75 வாரங்கள், 75 மாதங்கள் போன்ற கால வரம்புகளுக்கான டெபாசிட்டுகளுக்கு கூடுதலாக 0.15% வட்டி வழங்கப்படும்.

75 ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் இதுபோன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை புக் செய்யப்படும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். இந்த 75 நாட்கள் நாட்களுக்கான டெபாசிட்டுக்கு 4.05% விழுக்காடு வட்டி வழங்கப்படும். 75 வாரங்களுக்கு 5.15 விழுக்காடு வட்டியும், 75 மாதங்களுக்கான டெபாசிட்களுக்கு 5.55 விழுக்காடு வட்டியும் வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |