நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின பெரு விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை பலரும் பின்பற்று வரும் நிலையில் அந்த வரிசையில் திரை பிரபலங்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.அவரது வீட்டில் தேசியக்கொடி பறக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.இதற்கு முன்பு சென்னை பனையூரில் இருக்கும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து தற்போது விஜய் வீட்டில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.