75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதிய முயற்சியை மேற்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒரு இசை திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சாதக பறவைகள் மற்றும் ஜே.ஆர் 7 இணைந்து நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் கலைத்துறையினரின் பங்கு குறித்த அருங்காட்சியகமும் இடம்பெறவுள்ளது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் போது 75 பாடகர்களை ஒரே மேடையில் சேர்த்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ஆனது ஒரு நாள் முழுவதும் நடைபெறும் என்றும், நிகழ்ச்சியின் மூலம் யூனைடட் சிங்கர்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்கும் முடிவு செய்துள்ளனர். மேலும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் நாள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.