சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்களின் வரலாற்றை நினைவு கூறும் விதமாக சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எஸ்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 7 நாட்கள் நடைபெறும். இந்த விழா செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும், தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுய உதவி குழு, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ஏராளமான படைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆக கூடாது எனக் கூறினார். இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் எனவும், குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக மழைநீர் தொட்டி ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகேஷ் பேசினார். இவர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் மாணவர்களே ஆவார். மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வர இருப்பதாகவும், இதற்கு மாணவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.