சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மூவர்ண நிறத்தில் கார் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை கட்டிடம் உட்பட பல்வேறு அரச கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறத்தில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கார் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஒரு கார் மூவர்ண நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. அதோடு காரில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் புகைப்படங்களும் வைக்கப்பட்டது. மேலும் காரில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு வலம் வந்த காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.