சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் 2கே கிட்ஸ்களுக்கும், திருமணம் எப்போது தான் நடக்கும் என்று காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.’
அதாவது புதுச்சேரியில் 75 வயது முதியவருக்கும் 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த அந்த திருமணத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 90 கிட்ஸ் திருமணத்தை மையமாகக் கொண்டு பல மீம்ஸ்கள் பறக்கின்றன.இளம் வயதில் இன்னும் திருமணம் ஆகாமல் தவிக்கும் 90 கிட்ஸ்க்கு எப்போது திருமணம் நடக்குமோ என்ற வசனங்களும் கிண்டலாக பதிவிடப்பட்டுள்ளனர்.
https://twitter.com/ArulAnumarx/status/1564605026663706629