தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை சோழவந்தானில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 75 வயது மூதாட்டியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமாறன் என்ற வாலிபர் மதுபோதையில் மூதாட்டியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்த நிலையில் தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.