Categories
உலக செய்திகள்

“அனா புயல் கோரத்தாண்டவம்!”…. நாடு முழுக்க மின்தடை…. 75 பேர் பலியான சோகம்…!!!

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அனா புயல் தாக்கத்தால் 75க்கும் அதிகமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அனா எனப்படும் வெப்பமண்டல புயல் வீசியதில் மடகாஸ்கர் நகரில் 41 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, முகாம்களில் வசித்து வருவதாக கூறப்பட்டிருக்கிறது.

இது மட்டுமன்றி, மலாவி நாட்டிலும் 19 நபர்கள் இந்த புயலில் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், அந்நாடு முழுக்க மின்தடை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொசாம்பிக் நாட்டிலும், சுமார் 15 பேர் பலியானதோடு, 3,000 வீடுகள் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |