Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம்: மருத்துவ நிபுணர் குழு..!!

தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு மே31ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் குழு சார்பில் வைக்கப்பட்ட பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வரலாம் என்றும், அவர்களுக்காக தனிப் பேருந்துகளை இயக்கவும் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல, கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படடக்கூடாது என பரிந்துரை செய்துள்ளனர். ஏனெனில் பிற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதுதவிர, தமிழகம் முழுவதும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது. சென்னையை தவிர பிரமாவட்டங்களில் தொற்று குறைந்து இருந்தாலும் பொது போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது. வரும் வாரங்களில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதன்படி போக்குவரத்தை தொடங்குவது குறித்து ஆலோசிக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை நிபுணர்கள் குழு முன்வைத்துள்ளது.

Categories

Tech |