Categories
விளையாட்டு

75 சதவீத வீரர் ,வீராங்கனைகள் ….தடுப்பூசி போட்டு இருப்பார்கள் – தாமஸ் பேச்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக ,ஒலிம்பிக் போட்டிகள்  ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது . அதன்படி வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க  உள்ளனர் . இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான, பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட உள்ளது.  இந்நிலையில்  பல்வேறு நாடுகளிலும் கொரோனா  வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில்,பாதிப்பு ஜப்பானிலும் அதிகரித்து வருகிறது .

இதனால் அந்நாட்டு மக்கள் போட்டி நடத்துவதற்கு ,எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் போட்டிகள் திட்டமிட்டபடி, கொரோனா  தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி  நடத்துவதற்காக தீவிர முயற்சியில், ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி கமிட்டித் தலைவரான தாமஸ் பேச்,  நேற்று காணொளி வாயிலாக உள்ளூர் போட்டி ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் கூறும்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டிக்கு உதவும் வகையில் கூடுதலாக மருத்துவ ஆலோசகர்களை வழங்குவதற்கு தயாராக உள்ளோம் . எனவே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் ,வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தங்கும் ஒலிம்பிக் கிராமம் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.

அத்துடன் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர் ,வீராங்கனைகள்  மற்றும் உதவியாளர்கள் ஆகியோரில்,  75 சதவீதத்திற்கும் மேலானோர்  தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருப்பார்கள் அல்லது  போட்டி நடைபெறுவதற்கு முன்  தடுப்பூசி செலுத்தி இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனவே  போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடும் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டியிருக்கும். அத்துடன் தனிமைப்படுத்துதல் முறை, தினமும் கொரோனா  பரிசோதனை பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இன்னும் போட்டி நடைபெறுவதற்கு 64 நாட்களே இருப்பதால் போட்டியை பாதுகாப்பாக நடத்துவதில் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |