சென்னையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதேபோல வடபழனியை சேர்ந்த 70 வயது மூதாட்டி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மூச்சுத்திணறலால் உயிரிழந்த மூதாட்டியின் சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோவுக்கு நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.