Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7500 படுக்கைகள் காலியாக உள்ளது…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 7500 படுக்கைகள் காலியாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் வீடியோகால் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி வருகின்றனர் என மாநகராட்சி கூறியுள்ளது.

Categories

Tech |