Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; 13 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 173ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,757ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 57.12% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1054 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 952 பேர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 729 பேர் ஆண்கள், 417 பேர் பெண்கள், 3 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 12,049 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4,91,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட 1,286 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 18,995 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,052 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என மொத்தம் 72 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |