ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடியேற்றி 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கடந்த ஒரு வருடமாக அம்ரித் மகோத்சவ் என்ற பெயரிலான இந்திய சுதந்திர அமுதப் பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி வண்ணத்தில் ஆன தலைப்பாக அணிந்து வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
இந்த சூழலில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடியேற்றி 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பவன் கபூர் அங்குள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று காலை மழை தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து மூவர்ண கொடியேற்றப்பட்டு ஜனாதிபதியின் செய்தியை அவர் வாசித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.