தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ்அசுர வேகத்தில் பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 3 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தினமும் மாலை கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ல் இருந்து 1,520 ஆக அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457 ல் இருந்து 635 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது…
இன்று பாதிப்பு 76 அதிகரித்தாலும் ஒரே நாளில் 178 பேர் குணமடைந்த செய்தி மக்களுக்கு சற்று மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது..