Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 766 மரணம்…. இத்தாலியை கொன்று குவிக்கும் கொரோனா …!!

கொடூரத்தனமாக இத்தாலியை மிரட்டும் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 766 பேர் உயிரிழந்துள்ளது மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

Italy reports nearly 6,000 new cases of coronavirus and more than ...

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,087,374 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,392 பேர் உயிரிழந்துள்ளனர். 227,989 பேர் குணமடைந்த நிலையில் 800,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,402 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Italy's Coronavirus Death Toll Overtakes China's - WSJ

கொரோனா தாக்கத்தால் அதிக உயிரிழப்பை சந்தித்த இத்தாலியில் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்படுகின்றது. அங்கு நேற்று ஒரே நாளில் 766 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 14,681 ஆக அதிகரித்தது. இத்தாலியில் 1,19,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 19,758 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 85,388 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 4,068 பேர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

Categories

Tech |