Categories
மாநில செய்திகள்

Ops ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்த ஒரு பயனும் இல்லை…. செல்லூர் கே.ராஜு அதிரடி பேட்டி….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகாரம் தல தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. அறிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து மதுரை கே.கே. நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு செல்லூர் ராஜு வெள்ளிக்கிழமை மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த பதவியையும் கேட்காமலே என்னை அமைப்பு செயலாளராக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அவருக்கும் அதிமுகவுக்கும் விசுவாசமாக செயல்படுவேன். அதிமுக தொண்டர்கள் புனித இடமாக கருதும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தம் அளிக்கிறது.

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமை அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், அதிமுகவில் இணைய வேண்டும். மேலும் பிரிந்து சென்றவர்கள் மனம் வருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம். அதிமுகவில் சாதி ரீதியாக பதவி வழங்கப்படவில்லை. இதனையடுத்து  துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஏடிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்த ஒரு பயனும் இல்லை. கட்சி யார் பக்கம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தது எனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து அதிமுகவை நம்பியவர்கள் கேட்டதில்லை, நம்மால் கெட்டவர்கள் தான் பலர் உள்ளனர். அதிமுகவின் மக்களவை உறுப்பினராக இருக்கும் ப.ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கியதால் அதிமுக எந்த வித இழப்பும் இல்லை. மேலும் மக்களவை சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பல நிர்ணயம் செய்யப்படவில்லை. தொண்டர்களின் பலம் தான் அதிமுக என்று அவர் கூறினார்.

Categories

Tech |