சுமார் 77 வருடங்களுக்கும் மேலான பழமையான தேவாலய மணி ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தெற்கு போலந்தில் உள்ள Slawicice என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் 1555 ஆம் வருடத்துடன் தொடர்புடைய பழமை வாய்ந்த தேவாலய மணி ஒன்று தங்களுக்கு சொந்தமானது என்று கடந்த இரண்டு வருடங்களாக தேடி வந்துள்ளார்கள். அப்போது ஜெர்மனியில் உள்ள மான்ஸ்டர் என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆலயத்தில் 400 கிலோ கிராம் எடையுள்ள அந்த மணி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
அதாவது இரண்டாம் உலகப் போரில் நாஸிக்கள் 80,000 மணிகளை உருக்கி அதனை ஆயுதங்களாக உருவாக்கியிருக்கிறார்கள். அப்போது உருக்கப்படாமல் இருந்த 1,300 மணிகளில் போலந்து தேவாலயத்தின் மணியும் ஒன்றாகும். மேலும் இது போலந்து நாட்டின் தேவாலய மணி என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று காரணமாக உடனடியாக அதனை போலந்துக்கு அனுப்பப்போவதில்லை என்று கூறியுள்ளனர். இருப்பினும் மணியின் சொந்தக்காரர்கள் 77 வருடங்களாக காத்திருந்த எங்களுக்கு இந்த ஒரு மாதம் காத்திருப்பது பெரிய விசயமில்லை என்று கூறியுள்ளார்கள்.