Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 911ஆக உயர்வு – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார்.

மேலும் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் 5 பேர் மூலமாக கொரோனா பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஊரடங்கில் மக்கள் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறிய அவர் 90 சதவீத அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் வறுமையில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், வீடுகளில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |