மியான்மரில் வசிக்கும் 20 வயது இளம்பெண்ணிற்கும் 77 வயது முதியவருக்கு காதல் ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மியான்மரில் வசிக்கும், ஜோ என்ற 20 வயது மாணவி இங்கிலாந்தை சேர்ந்த 77 வயதான டேவிட் என்ற முதியவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வருகிறார். டேவிட் இசையமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் இருவரும் டேட்டிங் இணையதளத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.
ஜோ, ஒன்றரை வருடங்களுக்கு முன் தன் கல்விக்காக நிதி வழங்கும் வழிகாட்டி ஒருவரை தேடி கொண்டிருந்துள்ளார். அதே சமயத்தில் டேவிட் காதலிக்கும் எண்ணத்தோடு டேட்டிங் தளத்திற்கு சென்றிருக்கிறார். டேவிட், எப்போதும் தன்னை முதியவராக நினைப்பதில்லையாம். அவர், தான் இப்போதும் இளமையாக இருப்பதாக கூறுகிறார்.
ஜோ டேட்டிங் தளத்தில் டேவிட்டை தன் வழிகாட்டியாக கண்டுபிடித்த பின், தன் விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இவர்கள் இருவரும் தங்களை காதல் ஜோடிகளாக அழைப்பதை தவிர்க்கிறார்கள். இருவரும் உண்மை நண்பர்களாகவும், ஒருவொருக்கொருவர் சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் இது பற்றி டேவிட் கூறுகையில், ஜோவின் வழிகாட்டியாக, வாழ்க்கை துணையாக இருக்கிறேன் என்பதில் அதிக மகிழ்ச்சி. விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.