உலகளவில் சுமார் 775 மில்லியன் மக்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகளவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 775 மில்லியன் அளவுக்கு மக்கள் குறைந்தபட்ச கல்வியறிவு திறன் கூட இல்லாமல் இருக்கின்றனர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் 5 நபர்களில் ஒருவர் இன்னும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் மூன்றில் இரண்டு விழுக்காடு பெண்கள் தான் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கின்றனர். 60.7 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் கல்வியறிவு அற்றவர்கள் எண்ணிக்கை மீது அதிக கவனம் செலுத்திய யுனெஸ்கோ “அனைவருக்கும் கல்வி குறித்த உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை 2006_ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன்படி, தெற்காசியா மிகக் குறைந்த வயதுவந்தோர் கல்வியறிவு இல்லாமல் இருப்பதான வீதத்தைக் கொண்டுள்ளது (58.6%), அதைத் தொடர்ந்து துணை-சஹாரா ஆப்பிரிக்கா (59.7%). உலகின் மிகக் குறைந்த கல்வியறிவு கொண்ட நாடுகள் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%) மற்றும் மாலி (19%). என்று யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது.