தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளதால் 2328ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,275ஆக உள்ளது. இன்று மட்டும் 31-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை 1,516-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை மொத்தம் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் 31.4 % குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 13,281 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 1,78,472 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.