ஓடியா, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. இவர் சக நடிகரான பாபுஷான் மொஹந்தி என்பவருடன் சேர்ந்து ‘ப்ரேமம்’ என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாபூஷானின் மனைவியான திருப்தி மொஹந்தி, அவர்கள் சென்ற காரை மடக்கி சண்டையிட தொடங்கியுள்ளார். மேலும் நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து சரமாரியாக அடித்தார்.
இதனால், அங்கிருந்து தப்பியோடினார் மிஸ்ரா. இந்த சம்பவம் குறித்து மிஸ்ராவின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் திருப்தி மொஹந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து திருப்தி மொஹந்தி கூறும்போது, தனது கணவருக்கும், மிஸ்ராவுக்கு இடையே தகாத உறவு இருப்பதாக தெரிவித்தார். இதை மறுத்த பாபுஷான் இனி மிஸ்ராவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.