Categories
தேசிய செய்திகள்

78 ஆண்டுகளில்…. 41 கோடி குறைய வாய்ப்பு…. மக்கள் தொகை ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்திய நாட்டின் மக்கள் தொகை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் அடுத்த 78 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையானது 41 கோடியாக குறைய வாய்ப்புள்ளதாக ஸ்டான்போர்ட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2,100 ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையானது 141.2 கோடியிலிருந்து 100.3 கோடியாக குறைய வாய்ப்பிருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள் தொகையானது குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவின் சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன நாட்டின் மக்கள் தொகை வருகிற 2,100 ஆம் ஆண்டுக்குள் 49.4 கோடி மட்டுமே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பெண்கள் கருவுறுதல் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கருவுறுதல் எண்ணிக்கை குறைவதன் காரணமாகத்தான் மக்கள் தொகையும் வீழ்ச்சி அடையும். மேலும் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகையானது குறைய வாய்ப்பு இருந்தாலும், நைஜீரியா, எத்தியோப்பியா, எகிப்து மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் மக்கள் தொகை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |