ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பணிகள் எல்லாம் விளம்பரப் படுத்துகிறார்கள். அந்த விளம்பரம் படுத்துகின்ற பேனர் விலை 350 ரூபாய், அதற்கு வந்து 7906 ரூபாய் பில் போட்டுள்ளார்கள். விளம்பர பேனருடைய தோராய மதிப்பு 350 ரூபாய் இருக்கும். ஆனால் 7906 உள்ளாட்சியில் இருந்து அரசு உத்தரவு போட்டு, ஒரே கம்பெனிக்கு கொடுத்து இருக்கிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது.
குறிப்பிட்ட ஒரே ஒப்பந்ததாரருக்கு இந்த பணிகள் வழங்கப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு மாவட்டத்திலும்.. இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. இந்த பேனர் அடிப்பதற்கு எவ்வளவு ரூபாய் ஆகும் ? 350 ரூபாய் ஆகும். இந்த உள்ளாட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து விளம்பரப்படுத்துவதற்காக இந்த விளம்பர பேனர் அடித்திருக்கிறார்கள்.
இதில் மட்டும் ஒரு பேனருக்கு 7,906 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்ட அந்த ஒப்பந்ததாரருக்கு கொடுத்து இருக்கிறார்கள். இந்த விளம்பர பேனரை நாம் கடையில் போய் அடித்தால் வெறும் 350 ரூபாய் ஆகும், இதில் பெரிய ஊழல். நான் சொன்னதெல்லாம் விசாரிப்பதற்கு ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்.
அதேபோல டெண்டர் முறைகேடு எல்லாம் ஒப்பந்தம் விடுவார்கள், பின்பு பணி துவங்குவார்கள். பணி முடித்து பிறகுதான் பில் வாங்குவார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அப்படி இல்லை, பணி செய்யாமலேயே பில் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். அதுபோல இந்த ஆட்சியில் உழல் நடைபெறுவதற்கு இதையே இதுவே பெரிய சான்று என தெரிவித்தார்.