தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 25,344 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.50% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.