சர்வதேச பொருளாதார மதிப்பு தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் தள்ளப்பட்டிருப்பதாக உலக வங்கியின்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 20.5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக அமெரிக்கா மீண்டும் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சீனா 13.6 டிரில்லியன் டாலர் மதிப்புடன் 2_ஆவது இடத்திலும் . ஜப்பான் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் , ஜெர்மனி 4 ட்ரில்லியன் மதிப்புடனும் நான்காவது இடத்தில் உள்ளது.
2.82 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் பிரிட்டன் 5வது இடத்திலும் , 2.77 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பில் பிரான்ஸ் 6-வது இடத்திலும் , 2.7 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது புள்ளி விவரங்கள் தெரிய வந்துள்ளது. அடுத்ததாக 8 , 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் இத்தாலி , பிரேசில் , கனடா ஆகிய நாடுகள் உள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.