சசிகலா வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய டிடிவி தினகரன் சசிகலா வருகிற 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று கூறியுள்ளார். அவர் தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலை ஆன நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் அவசரஅவசரமாக திறக்கப்பட்டது .சசிகலா வருகையின் போது அம்மாவின் உண்மை தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போன்று அணிவகுத்து நிற்க வேண்டும். தமிழக எல்லையில் இருந்து சசிகலா வீடு வந்து சேரும் வரை வழிநெடுகிலும் வரவேற்கலாம் என தினகரன் தெரிவித்துள்ளார்.