Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட சென்றது குற்றமா…? 7 வயது சிறுமி மரணம்…. கொடூரர்கள் யார்…? போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி அருகே 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்வலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் முத்தாள். 7 வயதே ஆன இவர் காலையில் வெளியே விளையாட சென்றவர் பிறகு வீட்டிற்கு வரவில்லை என்றதும், அவரைத் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். பிறகு கல்வலை பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கிடப்பதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சிறுமியின் உடலை ஆய்வு செய்தபோது அது காணாமல் போன முத்தாள் என்பது தெரிய வரவே, அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் இது குறித்த தகவல் அறிந்ததும் அலறியடித்தபடி ஓடிவந்த பெற்றோர்கள் மகளின் உடலை கண்டதும் கதறி அழுதனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |