Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8மாதமாக தீராத முன்பகை…! நண்பரை நண்பர்கள் வெட்டிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு ….!!

நெல்லை மாவட்டத்தில் முன்பகை காரணமாக நண்பரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர் .

நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்தவர் மகாராஜன். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாராஜனுக்கு அவரது நண்பர் மணிகண்டன், அருள் உள்ளிட்ட   மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாளையங்கோட்டை  காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்பகை காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் வைத்து மகாராஜனை அருள், மணிகண்டன் உள்ளிட்ட மூவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து  குற்றவாளிகள் 3 பேரை கைது செய்தனர்.

Categories

Tech |