வறுகடலை ஆலையில் புகுந்த 8 அடி சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் தெருவில் வறுகடலை தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஆலைக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியே தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சுமார் 1மணி நேரம் போராடி 8 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்துள்ளனர். இதனைதொடர்ந்து அந்த பாம்பை பாதுகாப்பாக போடியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.