மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரண் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
மேலும் சரண் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சரணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.