Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. என்ன காரணம்….? கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த உமாபதி தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |