தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை (TNRD) அலுவலகங்களில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் ஜீப் ஓட்டுநர் பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 11 காலி பணியிடங்கள் உள்ளது. வரும் 25 ஆம் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஓட்டுநர் துறையில் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் 19 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 62 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முகவரி: மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2 வது மாடி, சிவகங்கை – 630562 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவம்: https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2021/01/2021010690.pdf
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2021/01/2021010686.pdf