சீனாவில் ஒரு பெண் schizophrenia என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை சங்கிலியால் கட்டிப்போட்டு ஒரு சிறிய குடிசை பகுதியில் அடைத்து வைத்திருப்பதாக வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் ஒரு பெண்ணை சங்கிலியால் கட்டிப்போட்டு சிறிய குடிசை பகுதியில் அடைத்து வைத்திருப்பதாக Douyin என்ற நபருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலறிந்து அந்த நபர் இந்த குடிசை பகுதிக்கு சென்று பார்த்தபோது ஒரு பெண்ணின் கழுத்தை சங்கிலியால் கட்டிப்போட்டு மிகச் சிறிய இடத்தில் அடைத்து வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பனி அதிகமாக விழும் காலத்தில் லேசான துணியை உடுத்தி இருந்த அவருக்கு கதகதப்பான துணிகளை வழங்கி பின் அப்பெண்ணிடம் பேச முற்பட்டார்.ஆனால் அதற்கு அப்பெண் சரியாக பதில் அளிக்கவில்லை. அதன்பின் தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.தற்போது சீனாவில் அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை பார்த்த பலர் கண்டித்துள்ள நிலையில் இவர் 8 குழந்தைகளை பெற்றிருப்பது சீனாவின் குடும்ப கட்டுப்பாட்டு விதிகளுக்கு அப்பாற்பட்டது எனவும் அதிகாரிகள் இதை கவனிக்கவில்லையா என கேள்வி எழுப்பி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரிக்கையில், Feng County Huankou Township பகுதியை சேர்ந்த yeng என்ற பெண்(மனைவி) எனவும் அப்பெண் schizophrenia என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதனால் இவ்வாறு கட்டிப்போட்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை மேலும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர். அதன்பின் போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அப்பெண்ணின் குழந்தைகளை மாநில குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.