Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 சிறுமிகள்…. ஒரு சிறுவன்….. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….. பெரும் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெல்லாதி என்ற பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி தங்கள் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் பெற்றோர்  இல்லாத நேரத்தில் வந்த சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார்.அது மட்டுமல்லாமல் மேலும் 7 மாணவிகள் எழுந்து  தங்களுக்கும் அந்த சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை கூறினர்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர் உடனே போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது,

Categories

Tech |