நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகி வரும் மெமரீஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வெற்றி. இந்த கிரைம் திரில்லர் படத்தில் அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வெற்றி இயக்குனர் வீ.ஜே. கோபிநாத் இயக்கத்தில் ‘ஜீவி’ படத்தில் நடித்திருந்தார். இந்த திரில்லர் திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
Happy to announce #Memories AudioRights bagged by #Lahari Music@SyamPraveen2 @act_vetri @Shijuthameens@sanlokesh @mugeshsharmaa@thilak_ramesh @ajayanwordstar@PRO_Priya @spp_media pic.twitter.com/2yAzkvWsTL
— Vetri (@act_vetri) June 6, 2021
இந்நிலையில் நடிகர் வெற்றி அடுத்ததாக நடிக்கும் திரில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மெமரீஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் ஷ்யாம் பிரவீன் இயக்குகிறார். ஷிஜுதமின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கவாஸ்கர் அபினாஷ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.