குஜராத் மாநிலத்தில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டியூஷன் சென்டர் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், டியூஷன் சென்டர்கள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு டியூசன் சென்டரில் கடந்த 7ஆம் தேதி ஒரு மாணவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த டியூசன் சென்டரில் படித்த 125 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏழு மாணவர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து துணை ஆட்சியர் ஆஷிக் நாயக் டியூசன் மையத்தை பூட்டி சீல் வைத்துள்ளார். ஏற்கனவே தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் பலருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த டியூசன் சென்டர் மூடப்பட்டுள்ளது.