திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 8,000 கோடி ஊழல் செய்துள்ளதாக சீமான் பரபரப்பாக பேசியுள்ளார்
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் 8000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
அதோடு இதனை அதிகாரபூர்வமாக சான்றுகளுடன் நிரூபிக்க என்னால் முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை தனக்கு போட்டியாக பார்க்கவில்லை என்றும் விஜய் தனக்கு தம்பி போன்றவர் என்றும் இருவருக்கும் கோட்பாடுகள் தான் வேறு வேறு தவிர கொள்கைகள் ஒன்றுதான் எனவும் அவர் கூறியுள்ளார்.