Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

8 மாத ஆண் குழந்தை கடத்தல்…. பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 12-ஆம் தேதி வெங்கடேசனின் மனைவி தனது குழந்தையுடன் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் முன் தனது குழந்தையை முன்புறம் இருந்த இருக்கையில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. மர்மநபர் குழந்தையை கடத்தி சென்றதை அறிந்து, அவர் தனது கணவர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து வெங்கடேசன் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |