Categories
மாநில செய்திகள்

8 மாத கருவை சுமந்து…. கொரோனா போர்க்களத்தில் உயிர்த்தியாகம்…. எம்பி சு.வெங்கடேசன் உருக்கம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் பங்களிப்பு சொல்லிலடங்காதது. இந்நிலையில் மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகபிரிய கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன், “எத்தனை பெரும் போரிலும் ஒரு கர்ப்பிணி இராணுவ பெண் வயிற்றில் கருவை சுமந்து போரிட முடியாது. ஆனால் 8 மாத சிசுவை சுமந்துகொண்டு மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார். பேரூழிகாலத்தில் பெருந்தியாகமென வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |