Categories
தேசிய செய்திகள்

8 மாத கர்ப்பிணி மனைவி….. கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

காவலர் ஒருவர் கர்ப்பிணி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் மோகன்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் ஆஷா தேவி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மோகன்லாலுக்கும், ஆஷா தேவிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்லால் தன்னுடைய மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதன் பிறகு அக்கம்பக்கத்தினர் மோகன்லால் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது ஆஷா பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மோகன்லால் வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிராம மக்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலை மறைவாக இருக்கும் மோகன்லாலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |