Categories
மாநில செய்திகள்

“8-ம் கட்ட அகழாய்வு பணிகள்”…. காணொலி மூலம் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

 மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பு வனம் அருகே கீழடியில் 2015ஆம் வருடம் முதல் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகளானது நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 2018ஆம் வருடம் முதல் தமிழகம் தொல்லியல்துறை சார்பாக நான்கு கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ள நிலையில், இங்கு கிடைத்த தொல் பொருட்கள், உலகரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகிறது. இதுவரையிலும் நடந்த 7 கட்ட அகழாய்விலும் மொத்தம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து காணொலியின் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதனிடையில் மணலூர், கீழடி, கொந்தகை, அகரம் போன்ற பகுதிகளிலும் 8ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் 2ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் துவங்கி வைத்தார். அதன்பின் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3ம் கட்ட அகழாய்வு பணிகளை மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

Categories

Tech |