Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 -ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை…!!!

சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகம்
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் : 23
மாத சம்பளம் : ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை
கடைசி தேதி 30.11.2020

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊரக வளர்ச்சி துறை வயது வரம்பு : அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2020 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு & நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் தகவல் மற்றும் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை பார்க்க tnrd.gov.in/ லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவதற்கு tnrd.gov.in/project/oa_form/office_assistant_application_form.php லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |