அமெரிக்க நாட்டின் வடமேற்கு வாஷிங்டன் பகுதியில் ghost guns எனப்படும் துப்பாக்கியால் தன்னை கொலைசெய்ய வந்த நபரிடமிருந்து கை கால்கள் கட்டப்பட்ட பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 8வது தளத்தில் இருந்து குதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள காவல்துறை, அந்த பெண் தன் கைகளின் கட்டுகளை மட்டும் முடிந்த வரை தளர்த்திவிட்டு 8வது தளத்தில் தளத்தில் இருந்து குதித்துள்ளார். இதனையடுத்து நிலவரத்தை உணர்ந்த குற்றவாளி அஙகு இருந்து தப்பி சென்றுள்ளார் என தெரிவித்துள்ளது. அதன்பின் வெளிவந்த காவல்துறையினர் அறிக்கையில், அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ghost guns எனப்படும் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இந்த குற்றச் சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு வந்த கைலி ஜமால் பால்மர் என்ற நபர் சம்பவம் நடந்த இடத்திற்க்கு திரும்பி வந்தபோது காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த ghost guns அரசாங்கத்தால் அனுமதிக்கப்படாத தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளாகும். இது சென்ற 2021ஆம் ஆண்டில் மட்டும் 20,000 குற்றச் சம்பவ இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த ghost gun-களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் ஒழிக்கப் போவதாக அறிவித்து இருந்ததும் குறிப்பிடதக்கது.
Commander Bedlion provides an update to the domestic incident in the 4500 block of Connecticut Ave, NW. pic.twitter.com/57fobvuZIq
— DC Police Department (@DCPoliceDept) April 22, 2022