பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுமியை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 26 வயதான பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 8 வயது சிறுமிக்கு மதம் சம்பந்தமாக ஒரு பாடம் ஒன்றை நடத்தியுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் அந்த சிறுமியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதை என்ன என்று புரியாமல் உணர்ந்த அந்த சிறுமி தனது மாமாவிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது மாமா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த ஆசிரியரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் தீர்ப்பில் ஆசிரியருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.