ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சக்ராயபேட்டா மண்டலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று மாலை விளையாடுவதற்கு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி காணவில்லை என்பதால் அவரது அத்தை அவரை தேடிச் சென்றுள்ளார். அப்போது 16 வயது சிறுவன் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. அவரின் சத்தம் கேட்டு அந்த சிறுவன் தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து அந்த சிறுமியை அத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.