கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரரை போஸ்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 வயதுடைய டேனியல் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அவர் தற்போது கோவை அத்திப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு இருக்கின்ற ஒரு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அதே பகுதியில் இருக்கும் 8 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று கடந்த ஒரு வாரங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி சிறுமியின் தாயார் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் காவல்துறையினர் டேனியல் மீது போஸ்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.