சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் நேரடி சேர்க்கை பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. அதனால் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவிகள் உடனடியாக தொழில் பயிற்சி நிலையத்தை அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மகளிருக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.
கல்வித்தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஆவணங்கள்: மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம், ஆதார் அட்டை நகல்
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்த உடன் தொழில் பழகுநர் பயிற்சியும், முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மாணவிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இது பற்றிய விவரங்களுக்கு 044-22510001, 9499055652 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்